அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஜித்தா: இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட தயார் என சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவுதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-மீடியாக்கள் தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை.
நான் எப்போதும் வன்முறையை தூண்டும் பேச்சு பேசியது கிடையாது. எப்போதும் மனித நேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன். வங்கதேச பயங்கரவாதி எனது ரசிகன் என்று தான் கூறியுள்ளான். இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால் இந்திய மீடியாக்கள் என்னை பற்றி தவறாக சித்தரிக்கிறது. இதனை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.


பிரதமர் மோடி இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்றால், நான் அதில் முழுமையாக செயல்பட தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை கேட்டு இவ்வாறு மாறியதாக கூறியிருந்தான். இதையடுத்து மத்திய அரசும், மராட்டிய அரசும் ஜாகீர் நாயக் தொடர்பான விஷயங்களை தீவிரமாக விசாரித்து வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-