அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மகாராஷ்டிர அரசைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலர் ஏ. குதரத்துல்லா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எம். சுல்தான் மொய்தீன்,தமுமுக மத்திய மண்டல தேர்தல் அலுவலர் கே.ஏ. மீரான் மொய்தீன், துணை செயலர் ஹயாத் பாஷா, மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் எப். முஹம்மது முனீர் மிஸ்பாஹி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் மீது அவதூறு பரப்பும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருக்கும் மகாராஷ்டிர அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.இதில்,பள்ளிவாசல் தலைவர்கள் முகம்மது யூசுப், பாஷாமைதீன், அஹமது ஹீசைன், அல்லாபிச்சை, முஹம்மது உஸ்மான் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலர் கோவை செய்யது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட துணைச்செயலர் ஜமீர்பாஷா வரவேற்றார். மாவட்ட இளைஞரணி

பெரம்பலூரில் இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மீது அவதூறு பரப்பும் மத்திய அரசையும் மகாராஷ்டிரா மாநில அரசையும் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

கோவை சைய்யது சிறப்புரையை கேட்ட அனைத்து சமூக மக்களையும் சிந்திக்க வைத்தது என்றால் மிகையாகாது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-