அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...1.பட்ட படிப்பை முடித்தவர்கள் www.ncs.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

2.அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.

3.இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம்.இந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் அறியலாம்.

 நன்றி:புதிய தலைமுறை : July 22, 2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-