அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 17). இவர், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். விஜயலட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த விஜயலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-