அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் மற்றும் வளைகுடா நாடுகள் தற்போது பொருளாதார சிக்கலில் உள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கின்றன.. ஆனாலும், இப்போதும் சில சுயநல ஏஜெண்டுகள்.. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற பொய்களை சொல்லி .. லேபர், தோட்டம் மற்றும் கால்நடைகளை மேய்க்கும் வேலைக்கும் அனுப்பிவிடுகிறார்கள்...
இங்கு அரசாங்கங்கள் வெளிநாட்டு தொழிலார்களுக்கு பல உரிமைகளை வழங்கினாலும்.. பேராசை பிடித்த பல அரபிகளும், சுயநலம் கொண்ட சில ஏஜெண்டுகளும் இணைந்து பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்...
இவர்கள் இப்போது குறிவைப்பது அதிகம் படிக்காத மக்களையும், அதிகம் படித்த மக்களையும் இல்ல... டிப்ளமோ, டிகிரி முடித்த நடுத்தவர்கத்தினரை தான்... இவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தாலும் ஏழாயிரம், எட்டாயிரம் சம்பளம் மட்டுமே கிடைக்கும் அதானால் இவர்கள் எளிதில் இவர்களிடம் ஏமாந்து விடுகிறார்கள்...
இவர்களை இவர்கள் குறிவைக்க இன்னொரு காரணமும் உள்ளது... ஆங்கிலமும் இவர்களுக்கு முழுசாக தெரியாது.. பிற மொழிகளையும் சீக்கிரம் கத்துகொள்ள மாட்டார்கள்.. ஆகவே தப்பிக்க வழி இல்லாமல் இவர்களிடம் அடிமை போல கிடப்பார்கள் என்பது இவர்கள் கணக்கு... படிக்காதவன் புதிய மொழியை சீக்கிரம் கற்று கொள்வானாம்... படிச்சவன் ஆங்கிலம் பேசுவதால் தப்பிக்க வழி இருக்கு... (அரபி சொன்னது) அதானால் தான் இடைப்பட்ட இவர்களை குறிவைத்து எடுக்கிறார்கள்...
புதிதாய் வருபவர்கள் நண்பர், உறவினருக்கு அறிமுகமான நிறுவனங்களுக்கு வேலைக்கு வருவது சிறந்தது.. இந்தியாவில் 15000 மேல் சம்பதிப்பவர்கள்.. வெளிநாட்டுக்கு வராமல் இருப்பது... ரொம்ப நல்லது...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-