அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய்: மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் டிரக் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் ஜெபல் அலி பகுதியில் ஏற்படுத்திய விபத்தின் போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு இலட்சம் திர்ஹாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட காரணங்களை கூறி இழப்பீடு வழங்க மறுத்து விட்டது. இந்நிலையில் அவர் வேலைபார்த்து வந்த நிறுவனம் பதவி நீக்கம் செய்து விட்டது.

இவருக்கு அப்பா, அம்மா, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது சகோதரர் புஜேராவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன.

தனது தம்பியை வெளியில் கொண்டு வருவதற்கு பொருளாதார உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சட்ட ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாக உதவிட விரும்புபவர்கள் 055 674 55 24 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-