அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சிறுபான்மை மாணவர்களுக்கான, மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்ட அறிவிப்பை, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: சிறுபான்மை மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், முழு நேரக் கல்வி முறையில், ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில் பதிவு செய்திருத்தல் வேண்டும். சிறுபான்மை பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு.
உதவித்தொகை: பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப, 10 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை. மருத்துவம் மற்றும் வீட்டு வாடகை சலுகையும் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 15
மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in
நன்றி:கல்விமலர்-19/07/2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-