அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வி.களத்தூர்.

 பெரம்பலூர்

 பெரம்பலூர்



பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்தது. குறிப்பாக, வி.களத்தூர்,வேப்பந்தட்டை, லாடபுரம், மேலப்புலியூர், பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால், வரத்து வாய்க்கால்களிலும், சாலையோரங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்வதற்காக தயார் நிலையில் இருந்த விவசாயிகளும், திடீரென பெய்த மழையால் குளிர் காற்று வீசியதை தொடர்ந்து கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-