அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஆண் மாணவர்களுடன் நீச்சல் தடாகத்தில் கட்டாய நீச்சல் பாடத்தில் கலந்துகொள்ள மறுத்த 12 மற்றும் 14 வயது முஸ்லீம் மாணவிகள் இருவருக்கும் சுவிஸ் அதிகாரிகளினால் அந்த நாட்டு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலை பாடதிட்டத்திற்கு இணங்க செயற்பட மறுத்ததால் குறித்த இரு சகோதரிகளினதும்  குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இரு சகோதரிகளும் அரபு நாடு ஒன்றிலிருந்து சுவிஸில் குடியேறியுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள போதும் அவர்களின் சொந்த நாடு தொடர்பில் குறிப்பிடவில்லை.

அந்நிய ஆண்களுடன் ஒன்றாக கலந்து நடைபெரும் நீச்சல் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் இம்முறையை மார்க்கம் அனுமதிக்கவில்லை என்பதால் தாங்கள் அதற்கு மறுத்துவிட்டதாக இது தொடர்பில் விளக்கமளித்துள்ள குறித்த இரு சகோதரிகளும் சுவிஸ் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-