அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதாம் சாப்பிட்டால், சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதில், உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலுக்கு வலு சேர்ப்பதுடன், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கும். குறிப்பாக, பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது.
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில், இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் இ அதிகம் உள்ளது.
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
பாதாம், மார்பக புற்று நோய் உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும். பாதாமில் குறைந்த அளவில், கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், பாதாம் சாப்பிட்டால், உணவுக்குப் பின் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-