அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஜூலை18:
பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட அரிய பொக்கிஷங்களை சேகரித்து அருங்காட்சியகம் அமைக்கப்படுமா ? என வரலாற்று ஆர்வலர் ள், பள்ளி மாணவர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
தமிழகத்தின் வரை படத்தில் மையத்திலிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கென தமிழக அளவில் தனித்துவம் மிக்க, தனிச் சிறப்புகள் கொண்ட ஆதாரங்கள் அதிக முள்ளன.வரலாற்று ரீதியான, பூகோள ரீதியான சான்றுகள் கணக்கில்லாமல் கண்டெடுக்கப் பட்ட போதும், அவை ஒன்றாக சேக ரிக் கப் பட்டு, மாவட் டத் தலை ந க ரான பெரம் ப லூ ரில் பாது காக் கப் ப டா மல், பல் வேறு இடங் க ளில் பர விக் கி டப் பது வர லாற்று ஆர் வ லர் க ளுக்கு ஏக் கத் தையே ஏற் ப டுத் து கி றது. இதில் கண் டெ டுக் கப் பட்ட சான் று க ளோடு, சில ரால் சேக ரிக் கப் பட்ட சான் று க ளும் ஏரா ளம் இருப் பது அறி யாத பல ருக் கும் ஆச் சர் யத் தையே ஏற் ப டுத் தும்.
பெரம் ப லூர் அருகே காரை கிரா மத் தி லி ருந்து அரி ய லூர் மாவட் டம் வரை முன் னொரு காலத் தில் கட லாக இருந் த தற் கான ஆதா ரங் கள் கண் டெ டுக் கப் பட் டுள் ளது. இதனை உறு திப் ப டுத் தும் வித மாக பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள ஆலத் தூர்,வேப் பூர் ஒன் றி யங் களை இணைத் தி டும் 20க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் கடல் வாழ் உயி ரி னங் க ளான நத் தை கள், கிளிஞ் சல் க ளின் பாசில் கள் எனப் ப டும் படி மங் கள் நடை பா தை க ளில் கண் டெ டுப் பது வாடிக் கையா கும். குன் னம், வர கூர் கிரா மங் க ளில் கடல் நத் தை க ளின் படி மங் கள் அதி க முள் ளன. கடந்த 1982 ல் கொட் டரை கிரா மத் தில் கண் டெ டுக் கப் பட்ட அமோ னைட் எனப் ப டும் மிகப் பெ ரிய கடல் நத்தை வர லாற்று பேரா சி ரி யர் தியா கரா ஜ னால் கண் ட றி யப் பட்டு கங் கை கொண்ட சோழ பு ரம் அருங் காட் சி ய கத் தில் பாது காக் கப் பட்டு வரு கி றது. கொட் டரை, கூட லூர், கொளத் தூர் ஆகிய பகு தி க ளில் செல் லு கிற ஆனை வாரி ஓடைப் பகு தி க ளில் கட லில் காணப் ப டும் அரி ய வகை கிளிஞ் சல் கள் பெரு ம ளவு காணப் ப டு கி றது.
10கோடி ஆண் டு க ளுக்கு முந் தைய ஜுரா சிக் சகாப் தத் தில் வாழ்ந்த டைனோ சர் கள் பெரம் ப லூர், அரி ய லூர் மாவட் டங் க ளில் அதி கம் வாழ்ந் துள் ளன. இதில் மாமிச பட் சினி, சைவ பட் சினி என 2 வகை யின் முட் டை க ளும் பெரம் ப லூர் மாவட் டத் தில் கண் டெ டுக் கப் பட் டுள் ளன. குறிப் பாக கொளக் கா நத் தம், மூங் கில் பாடி, கொளத் தூர் பகு தி க ளில் உழு கின்ற வயல் க ளில் கூட டைனோ சர் முட் டை கள் தென் ப டு கின் றன. விவ சா யி கள் அறி யா த தால் அவை வரப் போ ரங் க ளில் கேட் பா ரற் றுக் கிடக் கின் றன. குறிப் பாக இப் ப கு தி யில் கண் டெ டுக் கப் பட்ட கடல் நத்தை, கடல் குதிரை, கடல் கிளிஞ் சல் கள் கால மாற் றத் தில் கல் லா கிப் போன படி வங் க ளாக ஒதி யம் அரசு உயர் நி லைப் பள் ளி யில் பாது காக் கப் பட்டு வரு கி றது. இதே போன்ற கல் லான கடல் வாழ் உயி ரி னங் க ளின் படி மங் கள் தொண் ட மாந் துறை அரசு உயர் நி லைப் பள் ளி யி லும் பாது காக் கப் பட்டு வரு கின் றன. மனி த னுக் கான பரி ணாம வளர்ச் சி யின் சின் னங் க ளாக காரை, புது ந டு வ லூர், பாளை யம் பகு தி க ளில் இறந் த வர் க ளை யும், கோமா நி லைக்கு சென் ற வர் க ளை யும் அடக் கம் செய்ய பயன் ப டுத் திய முது மக் கள் தாழி கள் பல உள் ளன.
அதே போல் 17ம் நூற் றாண் டில் கட் டப் பட்டு இந் திய தொல் லி யல் துறை கட் டுப் பாட் டி லுள்ள பெரம் ப லூர் மாவட் டம், ரஞ் சன் குடி கோட் டை யில் 37ஆண்டு பணி பு ரிந்து ஓய் வு பெற்ற கோட் டைக் காவ லா ளி யால் பல ஆண் டு க ளா கக் கண் டெ டுக் கப் பட்ட ஆங் கி லே யர், பிரெஞ்சு, முக ம தி யர் பயன் ப டுத் திய 400ஆண் டு கள் பழ மை யான தாமிர, செப்பு, வெள் ளிக் கா சு கள், சுதந் தி ரத் திற்கு முந் தைய இந் திய நாண யங் கள், புழக் கத் தில் இல் லாத அரி ய வகை இந் திய நாண யங் கள், போரில் பயன் ப டுத் தப் பட்ட பீரங் கிக் குண் டு கள் பல் வேறு கலெக் டர் க ளி டம் ஒப் ப டைத் தும் பெற் றுக் கொள் ளா த தால் அவர் வசமே இன் ற ள வும் பாது காக் கப் பட்டு வரு கி றது.
அதே போல் பெரம் ப லூர் நக ராட் சிக் குட் பட்ட அர ணாரை கிரா மத் தில் வசிக் கும் மாணிக் கம் (50) என் ப வ ரால் பாது காக் கப் பட்டு வரும் பல் வேறு வெளி நா டு க ளின் யூரோ, டாலர், பவுண்ட், தினார், ரூபாய் பணத் தாள் கள், தமிழ்ப் பெண் கள் அணிந் தி ருந்த 300 ஆண் டு கள் பழ மை யான தண் டட்டி, தொங் கட் டான், தோடு, மாட்டு உள் ளிட்ட காத ணி கள், சிக் கி முக் கிக் கல், 17ம்நூற் றாண் டின் மன் னர் சேது பதி காலத்து காசு கள், 5ம் நூற் றாண்டு பல் ல வர் கால காசு கள், 10ம் நூற் றாண் டின் பாண் டி யர் கால காசு கள், பிரெஞ்சு காசு கள், மதுரை நாயக் கர் க ளின் 15ம் நூற் றாண்டு காசு கள், வில் பொறி இலச் சினை உடைய சேரர் காலத்து காசு கள், 2ஆயி ரம் ஆண்டு பழ மை யான சங் க கா ல காசு, 2ம், 3ம் நூற் றாண் டு க ளில் பயன் ப டுத் தப் பட்ட பான வாசி ஆட் சிக் கா லத்து காசு கள், பிரிட் டிஷ் கால வெள் ளிக் கா சு கள், 10,12ம் நூற் றாண் டு க ளின் சோழர் கால காசு கள், டெல்லி சுல் தான் காலத்து காசு கள், பல் ல வர் காலத்து காசு கள் 200க்கும் மேற் பட்ட அரிய நாண யங் கள் பாது காக் கப் பட்டு வரு கின் றன.
அதோடு சோழர் கால வீர வாள், 200 ஆண்டு பழ மை யான கத்தி, பனை ஓலை யில் எழு தும் எழு து கோல், 10 கோடி ஆண் டுப் பழ மை யான கல் ம ரத் துண்டு, மிகச் சி றிய நாண யம், 200 ஆண்டு பழைய லாந் தர் விளக்கு, 10 செமீ. உயர செம் பி னால் ஆன சொம்பு, 100ஆண்டு பழ மை யான வெங் கல கும்பா ஆகி ய வற் றைப் பாது காத்து வரு கி றார். பெரம் ப லூர் மாவட் டத் தில் கண் ட றி யப் பட்டு அரி ய லூர், கங் கை கொண்ட சோழபு ரம் அருங் காட் சி ய கங் க ளில் பாது காக் கப் ப டும் பல வற் றை யும் மீட் டெ டுத்து, ஒதி யம், தொண் ட மாந் துறை பள் ளி க ளில் உள் ள வற்றை ஒருங் கி ணைத்து, ரஞ் சன் குடி காசிம், அர ணாரை மாணிக் கம் ஆகி யோ ரி டம் உள்ள அரி ய வ கைப் பொருட் க ளைக் கொண்டு பெரம் ப லூர் மாவட்ட பள்ளி மாணவ, மாண வி யர் பயன் பெ றும் வித மாக, அருங் காட் சி ய கம் அமைத்து பாது காக்க மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பள்ளி மாண வர் க ளும், வர லாற்று ஆர் வ லர் க ளும் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-