அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில், இரட்டை மலை சந்து உள்ளது. அதன் வடபுரம் பச்சைமலையும், தென்புறம் ஒருத்தா மலையும் உள்ளது. இந்த ஒருத்தா மலையில் மேல் மலையின் கீழே கிடக்கும் கற்பாறைகளின் குவியல் உள்ளது. அதில் உள்ள ஒரு சிலபாறைகளை கையாலோ, கற்களை கொண்டோ ஓங்கி அடித்தாலோ கோவில் மணிஓசை போன்று சத்தமிடுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டப தூண்கள், பெரம்பலூர் அருகே உள்ள வெங்கனூர் விருத்தாசல ஈஸ்வரர் கோவிலில் கல்தூண்கள், செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகியவற்றில் விதவிதமான ஒலி ஓசை எழுப்பும் கலை நயமிக்க தூண்களை வடிவமைத்துள்ளனர். உதாரணமாக இது போன்ற ஒலிக்கும் ஓசை உடைய கற்கள் கொண்டு சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள் செய்ய்பட்டுள்ளது.

ஒலிக்கும் ஓசை உடைய பாறைகளை காணுவது அரியதாக உள்ளது. இது போன்ற கற்கள் அரிய வகையினை சேர்ந்தவை. இவை ஒலிக்கும் தன்மையுடைய கற்களை அரசு பாதுகாக்க செய்வதோடு மட்டுமில்லாமல் புவியியல், வரலாறு பயிலும் மாணவர்கள் காணும் வகையில் தடத்தை சீரமைத்து கொடுத்து அரசு உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


நன்றி : பெரம்பலூர் காலை மலர்.

.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-