அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பொறியாளர், ஓட்டுநர்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப் பணிகளில் பணியாற்ற பி.இ. மற்றும் பி.டெக். தேர்ச்சிப் பெற்ற 30 வயதுக்குள்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள சிவில் இன்ஜினியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 56,000;  ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம், பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குள்பட்ட பைபர் ஸ்பைலைசர்களுக்கு மாத ஊதியம் ரூ. 26,800; 2 ஆண்டுகள் பணி அனுபவம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்ற 50 வயதுக்குள்பட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ. 25,600;  ஜிசிசி நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ. 19,000; பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ. 16,700; தொலைதொடர்புத் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு  மாத ஊதியம் ரூ. 15,600 என்ற அடிப்படையில் 3 ஆண்டுகள் பணி ஒப்பந்தம் வழங்கப்படும்.

இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், உணவுப் படி, இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணிக்கான் ஊதியம், குவைத் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றை o‌mc‌r‌e‌s‌u‌m@‌g‌ma‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களை     http://www.omcmanpower.com/ என்ற  இணைய தளத்திலும், 044 22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்களிலும் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி:தினமணி-19 July 2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-