அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது அவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி காலை பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.








கொலைக்குப் பின்னர் சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்ததால், கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் செங்கோட்டைக்கு விரைந்தனர்.

இதையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த பண்பொலி கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் ராம்குமாரை மடக்கி கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பின்னர் கழுத்து அறுப்பட்ட நிலையில் அவரை கைது செய்த போலீசார் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நெல்லை கொண்டு வரப்பட்ட ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராம்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் பைம்பொழி கிரமாத்தை சேர்ந்தவர். இவர் ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்ததாக கூறப்படுகிறது. சென்னை சூளைமேட்டில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
.










செங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புகொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-