அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கற்றல், கற்பித்தலில் மாணவ, மாணவிகளின் நிலை குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளி வாரியாக மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னர் கலெக்டர் நந்தகுமார் பேசியதாவது:–

ஆரம்ப கல்வி

அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதன்மையாக விளங்கிட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான ஆரம்ப கல்வியை வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளை ஆரம்ப நிலையிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க வைப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். ஆரம்ப கல்வியை திறம்பட பயின்று இருக்கும் மாணவ–மாணவிகளுக்கு அரசுபொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் திறன் தானாக வளர்ந்துவிடும்.

கிராமப்புறங்களிலுள்ள குழந்தைகள் எந்தசூழலிலும் பள்ளிக்கு வருவது தடைபடாத வகையில், அவர்களை கண்காணிக்க வேண்டும். மேலும் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வந்து கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி தலைமைஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு தேர்வுகள்

ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் கற்றலில் முழுமை அடையும் விதமாக அவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு சிறப்புதேர்வுகளை நடத்தி ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி முனுசாமி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி எலிசபெத், முதன்மைகல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-