அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், ஜூலை 24
கடந்த வாரம் அஜ்மான் நகரில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டுனர்ஒருவரால் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து புதிதாக டிரைவிங் லைசென்ஸிற்கு (ஓட்டுனர் உரிமத்திற்கு) விண்ணப்பிக்கும் அனைவரும் தங்களின் உடல்நிலை குறித்து கட்டாய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க ஆலோசித்து வருவதாக அமீரக பெடரல் டிராபிக் கவுன்சிலின் தலைவர் மேஜர் ஜெனரல் முஹம்மது ஸயிஃப் அல் ஜெஃபீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொதுவாக விபத்துக்களின் காரணங்களாக மது அருந்துதல், மாரடைப்பு, கை கால் வலிப்பு, நீரிழிவு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் காரணமாக இருப்பதால், ஒருவர் ஒட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போதே தனக்கிருக்கும் நோய்கள் குறித்து அறிவிக்கும் உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டி வரும் என்றும்,

இத்தகைய ஆவணங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவர் விண்ணப்பதாரர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வாகனம் ஒட்ட தகுதியானவரா என்பது குறித்து பரிந்துரை செய்வார் எனவும்

அதேவேளை ஒட்டுனருக்கான தற்போதுள்ள மருத்துவ சோதனை
நடைமுறைகளும் தொடரும் என்றும், மாற்றுத் திறனாளி ஒட்டுனர்களும் அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளி மற்றும் மருத்துவ ரீதியான குறைபாடு உடையவர்களுக்கு அவர்களுக்குரிய வேகக்கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு அறிவுறுத்தலுடன் ஒட்டுனர் உரிமம் வழங்கப்படும் எனவும் , நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் ஒட்டுனர் உரிமம் முற்றாக மறுக்கப்படும் என அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு கால ஓட்டத்தில் ஏற்படும் தங்களுடைய நோய் முற்றல் போன்ற விபரங்களை உடனுக்குடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் முன்பே பெற்றவர்களும் தங்களுடைய நோய் பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும்.

மேற்படி ஆலோசணைகள் அனைத்தும் ஒட்டுனர்களின் நலன், பாதுகாப்பான சாலை போக்குவரத்து ஆகியவற்றை கருத்திற் கொண்டே எதிர்வரும் அமீரக பெடரல் டிராபிக் கவுன்சில் ஆலோசணை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்ட பின்னரே புதிய அறிவுறுத்தல்கள் நடைமுறைக்கு வரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில் நம்ம ஊரான் (அதிரை நியூஸ்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-