அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வருவாய் கோட்டாட்சியர் ரா. பேபி.

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து வருவாய் கோட்டாட்சியர் மேலும் பேசியது:

பெரம்பலூர் மாவட்டத்தில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்று வைக்கும் விளம்பர பதாகைகளில் அதற்கான அனுமதி எண் நிச்சயம் இடம்பெற வேண்டும்.

அனுமதி எண் இன்றி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர்கள் மீதும், நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிளக்ஸ் போர்டு, விளம்பர பதாகைகளில், சமூகம், மதம் தொடர்புடைய வாசகங்கள் மற்றும் அடையாளங்கள் இடம்பெற கூடாது. மேலும், தயார் செய்யப்படும் பிளக்ஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகள் மூலமாக சமுதாயத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிந்தால், அவற்றை அச்சக உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் தங்களிடம் வருவோரின் தொலைபேசி எண், முழு முகவரியை சேகரித்து வைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அச்சக உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்மூலம் சமுதாயத்தில் சமூக மற்றும் மத ரீதியிலான பிரச்னைகள் எழாமல் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியும் என்றார் அவர்.இக்கூட்டத்தில், துணை கண்கானிப்பாளர் ஜவஹர்லால், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), மனோன்மணி (வேப்பந்தட்டை) உள்பட அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-