அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாதியில் நின்ற திருமணம்! மோடி குறித்து மணமக்கள் விவாதம் செய்ததால் விபரீதம்கான்பூரில் மணமக்கள், பிரதமர் மோடி குறித்து விவாதம் செய்து சண்டை போட்டுக்கொண்டனர். இதனால் திருமணம் பாதியிலேயே நின்று போனது.


உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சொந்த பிசினஸ் செய்யும் ஒருவருக்கும் அரசு ஊழியரான மணப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு தரப்பும் தீவிரமாக செய்து வந்தது. கோயிலில் வைத்து திருமணம் செய்ய இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர்.

எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருந்த சமயத்தில், மாப்பிள்ளையும் பொண்ணும் மோடி குறித்து விவாதம் செய்தனர் மணமக்கள். ஒருகட்டத்தில் விவாதம் வாய்ச் சண்டையாக மாறி, கருத்துவேறுபாடு வந்துள்ளது. இதனால் கோபமான இருவரும் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால், திருமணம் நின்றது. எனினும் இருவரும் சமாதானமாகி மீண்டும் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-