அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி தாக்குதல் குறிப்பாக பொலிஸாரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, சவூதி அரசாங்கத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சவூதி அரசாங்கம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை அழிப்பதற்கு உதவி வருகின்றமை அதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


நோன்பு திறக்கும் நேரத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதலின்போது, தாக்குதலை மேற்கொண்ட நபர், நோன்பு திறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொலிஸாரிடம் வந்து, தானும் உங்களுடன் இணையலாமா என கேட்டுள்ளார்.


பொலிஸார் அவரை வரவேற்றதை அடுத்து, அருகில் நெருங்கி வந்த அவர் தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சவூதி அரேபியாவில் நேற்று (04) மாத்திரம் ஜித்தா, காதிfப், உள்ளிட்ட இவ்வாறான மூன்று தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-