அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்:
#Share_பண்ணுங்க_தமிழுக்கு_Support_பண்ணுங்க:
 RTA (Road Transport Authority) உடைய மொபைல் அப்ளிகேஷனில் தற்போது அரபி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.(RTA Dubai Mobile Aplication Survey)
    மேற்சொன்ன இரண்டு மொழிகள் தவிர, இன்னும் இரண்டு மொழிகளை இணைக்க துபாய் அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்துகிறது.
   இதில் இந்திய மொழிகளில் ஹிந்தி மற்றும் மலையாளம் மட்டுமே இடம்பிடித்துள்ளது. இதுதவிர ரஷ்ய, சீன மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டு மொழிகளும் தேர்வு செய்யும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
   கணிசமான அளவில் வாழும் தமிழர்களாகிய நம் தமிழ் மொழி பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் இதர (Others) என்ற இடத்தில் தமிழ் மொழியை இடம்பெறச் செய்வதன் மூலம் அந்தச் செயலியில் தமிழுக்கான இடத்தைப் பெறமுடியும்.
நீங்கள் துபாயில் வசிப்பவராக இருந்தால் முதல் கமெண்டில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று TAMIL என்று எழுதி விருப்பம் தெரிவிக்கவும்.

பி.கு: இந்தச் செய்தியினைப் பகிர்பவர்கள் மறக்காமல் அந்த இணையதளத்திற்கான இணைப்பையும் சேர்த்தே பகிரவும்,

Survey Link >> https://app.knowledgetrak.com/fill-survey/2290/mobileapp

RTA Dubai App Link  >> https://play.google.com/store/apps/details?id=com.rta.rtadubai&hl=en

Thanks : Rafeeq Sulaiman

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-