அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதி அரே­பி­யா­வா­னது கடந்த வருடம் மக்­காவில் இடம்­பெற்ற சன­நெ­ரி­சலில் பெருந்­தொ­கை­யானோர் உயி­ரி­ழந்­ததை கவ­னத்திற் கொண்டு, இந்த வருடம் அவ்­வா­றான அசம்­பா­விதம் ஏற்­ப­டு­வதைத் தடுக்கும் வகையில் புதிய பாது­காப்பு நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது.

அதன் பிர­காரம் இந்த வருடம் மக்­கா­விற்கு செல்லும் அனை­வ­ருக்கும் இலத்­தி­ர­னியல் அடை­யாள கைய­ணி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தனிப்­பட்ட மற்றும் மருத்­துவ தக­வல்­களை உள்­ள­டக்­கிய இந்த கைய­ணிகள் சன­நெ­ரி­சலில் சிக்கிக் கொள்­ப­வர்­களை அடை­யாளம் கண்டு துரி­த­மாக நட­வ­டிக்கை எடுக்க அதி­கா­ரி­க­ளுக்கு உதவும் என சவூதி அரே­பிய அர­சாங்க உத்­தி­யோ­க­பூர்வ பத்­தி­ரிகை முகவர் நிலை­ய­மான சவூதி பிரெஸ் குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் பயன்­பாட்­டாளர் இருக்கும் இடத்தை அடை­யாளம் கண்­ட­றிய உதவும் நீரால் பாதிக்­கப்­ப­டாத இந்த இலத்­தி­ர­னியல் கைய­ணிகள் தொழுகை நடை­பெறும் நேரங்கள் சம்­பந்­த­மான தக­வல்கள், உல­க­மெங்­கிலுமி­ருந்து வரும் அரே­பிய மொழி பேசாத யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான பன்­மொழி வழி­காட்­டல்கள் என்­பவற்­றையும் வழங்கும்.

 அத்­துடன் பாது­காப்பு நடவடிக்கையாக யாத்திரிகர்கள் நடமாடும் பிராந்தியங்களில் சுமார் 1,000 புதிய கண்காணிப்பு புகைப் படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-