அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தடுக்கப்பட்ட தவறான உடலுறவுகள்!

மலப்பாதையில் உடலுறவு பலவீனமான ஈமானுடைய ஒரு சிலர் தம் மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதிலிருந்து விலகி பேணுதலாக இருப்பதில்லை. இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (நூல்: அஹ்மத்)இன்னும் சொல்வதானால் ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் எனவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நற்சிந்தனையுடைய மனைவியர் சிலர் இதனை மறுத்தாலும் சில கணவன்மார்கள் இதற்கு நீ இணங்கவில்லையெனில் உன்னை விவாகரத்துச் செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர். இன்னும் சிலரோ இது கூடுமா? கூடாதா? என மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்பதற்கு வெட்கப்படக்கூடிய தம் மனைவியரை இது கூடும் என்ற சந்தேகத்தில் ஆழ்த்தி ஏமாற்றி விடுகின்றனர். சிலபோது பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அவளுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்; “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பும் முறையில் செல்லுங்கள்” (அல்குர்ஆன் 2:223). ஆனால் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்திருக்குமென்பது நாம் அறிந்த ஒன்றாகும். கணவன் தன் மனைவியின் பிறப்பு உறுப்பில் அவன் விரும்பும் முறையில் முன்புற வழியாகவோ பின்புற வழியாகவோ உடலுறவு கொள்ளலாம் என்பதை திண்ணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தியே உள்ளனர். அப்படியிருக்க பின் துவாரமென்பது பிறப்பு உறுப்பு அல்லவே.இத்தகைய தீமையின் காரணங்களுள் மற்றொன்று என்னவெனில், தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு முன் அறியாமைக்காலத்து அருவருக்கத்தக்க தீய நடத்தைகளை அனந்தரப் பழக்கங்களாக பெறுகிறான் மனிதன். மேலும் ஹராமென விலக்கப்பட்ட விநோதமான பாலுணர்வு அனுபவங்களுடன் அல்லது ஆபாசமான படங்களின் தீய காட்சிகளால் நிறைந்த சிந்தனையுடன் வருகிறான். இத்தகைய பாவங்களிலிருந்து பாவமன்னிப்புத் தேடாமலேயே தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசித்து விடுகிறான்.ஆக இச்செயல் – கணவன் மனைவி இருவரும் இதனைப் பொருந்திக் கொண்டாலும் – ஹராமானதே என்பது தெளிவு. ஏனெனில் ஒரு ஹராமைப் பொருந்திக் கொள்வது அதை ஹலாலாக மாற்றி விட முடியாது.

மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு

“இன்னும் மாதவிடாய்ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஓர் தூய்மையற்ற நிலை, ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டும் விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்” (அல்குர்ஆன் 2:222)

அவள் தூய்மையடைந்து குளிக்காத வரை அவளிடம் உறவு கொள்வது கூடாது. அல்லாஹ் கூறுகிறான்: “பிறகு அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” (அல்குர்ஆன 2:222)

இது எவ்வளவு பெரிய மோசமான பாவமென்பதை பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது. ‘யாரேனும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உறவு கொண்டால் அல்லது குறிகாரனிடம் சென்றால் முஹம்மதுக்கு இறக்கியருளப்பட்ட (வேதத்)தை அவன் நிராகரித்து விட்டான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

இதனை ஒருவர் வேண்டுமென்றே அல்லாமல் தவறுதலாக, (அதன் சட்டத்தை) அறியாமல் செய்து விட்டால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. வேண்டுமென்றே (சட்டம்) அறிந்து செய்தால், சில அறிஞர்களின் கூற்றின் பிரகாரம் அவர் பரிகாரம் செய்வது அவசியமாகும். பரிகாரம் பற்றி கூறப்படக்கூடிய ஹதீஸை அவர்கள் சரி காணுகின்றனர். பரிகாரம் என்பது ஒரு தினார் அல்லது பாதி தினார் தர்மம் செய்வதாகும். இந்த ஒரு தினார் அல்லது பாதி தினார் கொடுப்பதிலேயும் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.சிலர் கூறுகின்றனர்: அவ்விரண்டில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்ளலாம். அதாவது விரும்பினால் ஒரு தினாரோ பாதி தினாரோ கொடுக்கலாம். இன்னும் சிலர் கூறுகின்றனர்: மாதவிடாய் காலத்தின் கடைசி கட்டத்தில் உதிரப்போக்கு மிகவும் குறைந்து விடும்போதோ அல்லது அவள் குளிப்பதற்கு முன்போ அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் பாதி தினார் கொடுக்க வேண்டும். உதிரபோக்கு அதிகம் ஏற்படுகின்ற மாதவிடாயின் ஆரம்ப கட்டத்தில் அவளிடம் அவர் உறவு கொண்டால் அவர் ஒரு தினார் கொடுக்க வேண்டும். ஒரு தினார் என்பது மக்களுடைய வழக்கத்தில் உள்ள அளவின்படி 4.25 கிராம் தங்கமாகும். இந்த அளவு தங்கத்தையோ இதன் மதிப்புக்கு ஈடான ரொக்கப் பணத்தையோ அவன் தர்மம் செய்யலாம்.ஒரினப் புணர்ச்சி

லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், ‘நீர் உண்மையாளராயின் அல்லாஹ்வின் வேதனையை எங்களுக்குக் கொண்டுவாரும்’ என்பதாகவே இருந்தது” (அல்குர்ஆன் 29;28,29)

இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித் தண்டித்ததில்லை. அவை: அவர்களின் கண்களைக் குருடாக்கினான். அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான். அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான். அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.(முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த) இந்த ஷரீஅத்தின் சரியான கூற்றின்படி வாளால் வெட்டிக் கொல்வதே இக்குற்றத்தைச் செய்த இருவரின் தண்டனையாகும். அவ்விருவரும் சுய விருப்பத்தின்படி அதைச் செய்திருந்தால். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘லூத் அலைஹிஸ்ஸலாம் சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)

இது போன்ற மானக்கேடான செயல்களால் நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் பரவி வருவதைப் பார்க்கும் போது இக்குற்றத்துக்கு இத்தகைய தண்டனை விதித்திருப்பதில் இறைவனுடைய நுட்பம் நமக்குத் தெரிய வருகிறது.

மேற்கூறப்பட்டுள்ள இஸ்லாம் தடுத்துள்ள இத்தகைய தவறான உடலுறவு முறைகளே உயிர்க்கொல்லியான ”எயிட்ஸ் நோய்” பரவுவதற்கு முக்கிய காரணம் என்பதை இன்றைய மருத்துவ உலகம் ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். இறைவன் வகுத்துத்தந்துள்ள ஹலாலான வழிமுறைகளில் உடலுறவு கொள்வோம் ஹராமான வழிமுறைகளை வேறொடு சாய்ப்போம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-