அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மதீனாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என  சவுதி உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.
தாக்குதலின் இலக்கு சவுதி காவற்துறையினரே என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு ஊர்ஜிதம் செய்துள்ளது.

குறித்த சம்பவம் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்த எரிவாயு சிலிண்டரே வெடித்ததாகவும் தகவல்கள் பரவியிருந்த நிலையில் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள உள்துறை அமைச்சு குறித்த சம்பவம் தற்கொலைத் தாக்குதலே என உறுதி செய்துள்ளது.

அதேநேரம் முன்னதாக ஜித்தா அமெரிக்க துனை தூதரகம் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியவன் அப்துல்லா கல்சர் கான் எனவும் அவன் சவுதியில் 12 வருடங்களாக வசிக்கும் பாகிஸ்தான் பிரஜை என சவுதி உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-