அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

​சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் நிறுவன அதிபர் வெட்டிப் படுகொலை!
சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் நிறுவன அதிபர், 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பி.எஸ்.நகரை சேர்ந்த கண்ணன் என்பவர், பழைய ப்ளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர், இஸ்லாமிய மதத்தற்கு குடும்பத்துடன் மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்ணன் இன்று தனது நிறுவனத்தில் இருந்தபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பியோடியது. படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், கண்ணணின் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-