அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


பேரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் இருந்து அன்னமங்கலம் அருகில் கல்லாற்றுக்கு வரக்கூடிய நீர் வரத்து வாய்க்காலில் தடுப்பணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள பல விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இந்த தடுப்பணையை அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 63), அவரது மகன் செந்தில்குமார் (35) ஆகியோர் தங்கள் வயலுக்கு செல்வதற்கு இந்த தடுப்பணை இடையூறாக இருப்பதாக கூறி தடுப்பணையை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் வெங்கலம் கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரும்பாவூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-