அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 3 கப்
சீரக தூள் - 1tbspn
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தனி தனியாக அரைத்துக் கொள்ள:
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
புதினா + மல்லி இலை - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது அரைக்க (3tbspn):
இஞ்சி - 1 துண்டு
பூண்டு- 6 பல்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் -1
மட்டனுடன் சேர்த்து ஊற வைக்க:
அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tbspn
மஞ்சள் தூள் - 1 tsp
தனியா தூள் - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
தயிர் - 1கப்
எலுமிச்சை சாறு - 1 tbspn
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் + நெய் - சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
பச்சை மிளகாய் - 4
செய்முறை:
1. முதலில் மட்டனுடன் ஊற வைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து ஊற வைக்கவும்.
2. தனி தனியாக அரைக்கச் சொன்னதை அரைத்துக் கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
4. பின் வெங்காய விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கிய பின், மீதம் உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் ( 1tbspn) சேர்த்து வதக்கி புதினா + மல்லி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
6. புதினா பேஸ்ட் கலர் மற்றும் வாசனை மாறிய பிறகு சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
7. இதனுடன் ஊற வைத்த மட்டன் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
8. பின் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
9. பாஸ்மதி அரிசியினை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.
10. மட்டன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது, ஊற வைத்த அரிசி சேர்த்து மூடி போட்டு 2- 3 நிமிடங்கள் வேக விடவும்.
11. 2-3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3-4 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் மூடி போட்டு வேக விடவும். ( குக்கரில் போடுவதாக இருந்தால் 1விசில் போடவும்)
12. சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி தயார்.
13. தயிர் பச்சடி, முட்டையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
டிப்ஸ்:
1. மட்டனை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.( 2-3 மணி நேரம் கூட ஊற வைக்கலாம்)
2. மிதமான தீயில் வைத்தே சமைக்கவும்.
3. அரிசியினை அதிக நேரம் ஊற வைத்தால் கிரேவியுடன் சேர்த்து வேக வைக்கும் பொழுது அரிசி உடைந்து விடும். எனவே 10நிமிடம் போதுமானது.
4. சிக்கனில் கூட செய்யலாம். சிக்கனை விட மட்டனில் செய்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்த அசத்தலான ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்
Ameena Ashab - காயல்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-