அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரை அடுத்த குரும்பலூரை சேர்ந்தவர் செல்வம் (வயது45). இவர் வளைகுடாநாட்டில் கத்தாரில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை செல்வம் மாரடைப்பால் இறந்துவிட்டதாக குரும்பலூரில் வசிக்கும் செல்வத்தின் மனைவி கஸ்தூரிக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து கஸ்தூரி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் நந்தகுமாரை நேற்று சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் தனது கணவன் செல்வத்தின் உடலை கத்தாரில் இருந்து பெற்றுத்தரவும், இறுதி சடங்கிற்காக உடலை குரும்பலூருக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-