அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தன்னுடைய வீடியோ பதிவுகளை திருத்தி வெளியிட்டதாக ஊடங்கள் மீது மத போதகர் ஜாகிர் நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.


மும்பை:

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெக்கா நகருக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக் விரைவில் மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய வீடியோ பதிவுகளை திருத்தி வெளியிட்டதாக ஊடங்கள் மீது மத போதகர் ஜாகிர் நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைதி டிவி அனுமதி இல்லாமல் ஒலிபரப்பபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,”எங்கள் மீது தடை இல்லை. பதிவிறக்கம் செய்வதற்கு நாங்கள் அனுமதி பெறவில்லை” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

2008-ம் ஆண்டு மற்றும் மீண்டும் 2012-ல் அனுமதி கோரி விண்ணப்பித்தோம். பாதுகாப்பு காரணம் கூறி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அனுமதி வழங்கவில்லை.

இஸ்லாமிய சேனலாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஊடகங்கள் எனது வீடியோ எடிட் செய்து வெளியிடுகின்றன.

இந்த ஆண்டு இந்தியா திரும்பும் திட்டமில்லை. எந்த தீவிரவாத இயக்கத்தாலும் நான் ஈர்க்கப்படவில்லை. ஒருபோது எந்தவொரு தீவிரவாத தாக்குதலையும் நான் ஆதரிக்கவில்லை.

இஸ்லாமை பொறுத்த வரை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது பாவம். கொலை செய்வதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-