அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும் கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள் அவனை முற்றிலுமாக மாற்றும் என்பதற்கு மன்சுக்பாய் பிரஜபதி சரியான எடுத்துக்காட்டு எனலாம்.

நிலநடுக்க பாதிப்பை செய்தித் தாள்களில் பார்த்த பிரஜபதி குறிப்பிட்ட செய்தி தலைப்பைப்பார்த்து புதியக் கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என முடிவெடுத்தார். இதோடு மூன்று ஆண்டு உழைப்பு மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதனப் பெட்டியை உருவாக்க வழி செய்தது.

உடைந்த நீர் வடிகட்டி இயந்திரம் மற்றும் தன் புகைப்படத்துடன் கூடிய செய்தி தொகுப்பு ஒன்றின் தலைப்பு 'the broken fridge of poor' அதாவது ஏழைகளின் உடைந்த குளிர்சாதன பெட்டி என்ற தலைப்பில் வெளியானது.

உடைந்த பானைஇந்தத் தலைப்பை பார்த்ததும் மின்சாரம் இன்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்ததாக பிரஜபதி தெரிவித்துள்ளார்.

திட்டம்மூன்று ஆண்டு கடுமையான ஆய்வுப் பணிகளில் பல்வேறு விதங்களில் குளிர்சாதன பெட்டியை வடிவமைத்தார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு மிட்டிக்கூல் என்ற வடிவமைப்பினை உறுதி செய்தார்.

மிட்டிக்கூல்இந்தக் குளிர்சாதன பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் மற்றும் களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இதில் உணவுகளைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டது.

மண்இந்தக் களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும்.

இயற்பியல்மிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைக்கும்.

நீர்இந்தக் குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.5500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பைப் பார்த்து வியந்த பேராசிரியர் இதனை வியாபாரம் செய்ய உதவினார்.

விலை'அதன் படி பேராசிரியர் உதவியால் ரூ.1.8 லட்சம் நிதியுதவி பெற்றது எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது' என்றும் பிரஜபதி தெரிவித்தார்.

ஊக்கம்இதோடு இல்லாமல் களிமண் கொண்டு பல்வேறு இதர கருவிகளையும் பிரஜபதி கண்டுபிடித்திருக்கின்றார். இவரின் மிட்டிக்கூல் குளிர்சாதன பெட்டியில் உணவுகளை ஐந்து மணி நேரத்திற்குக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

கண்டுபிடிப்பு0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-