அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெருநாள் தொழுகைக்கு
முன் - பின் சுன்னத் தொழுகை கிடையாது. (ஆதாரம் : புகாரி 911-935)

தொழுகையில் 7+5 தக்பீர் கூறவேண்டும் தக்பீர் கூறும்போது ஒவ்வொரு தடவையும் கையை அவிழ்த்து கட்ட வேண்டியதில்லை.

பெருநாள் தொழுகைக்கு செல்லும்போது ஒரு வழியாகவும் திரும்பி வரும் போது வேறு வழியாகவும் வர வேண்டும் (ஆதாரம்  புகாரி 933)

திடலில் தொழுவதுதான் நபி வழி அன்றைய நாளில் தொழுகையை முதல் காரியங்களாக நபி (ஸல்) அமைத்துக்கொண்டார்கள். (புகாரி 956)

தொழுகையில்  நபி (ஸல்) அவர்கள்  முதல் ரக்காயத்தில்
50 வது அத்தியாயத்தையும்
இரண்டாவது ரக்காயத்தில் 54 வது அத்தியாயத்தையும் ஓதினார்கள் .
சிலநேரம் 87 ம் 88 ம் ஓதினார்கள்.
முஸ்லிம் 1477. 1452

நோன்பு பெருநாளில் தொழுகைக்கு செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் இனிப்பு சாப்பிட்டார்கள், ஹஜ் பெருநாளில் தொழுகைக்கு பின் இனிப்பு சாப்பிட்டார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-