அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஓடும் ரெயில்களில் திருநங்கைகளால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் பெண்ணுக்கு திருநங்கைகள் சுகபிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


வேலூர்:

ஓடும் ரெயில்களில் திருநங்கைகளால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் பெண்ணுக்கு திருநங்கைகள் சுகபிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அல்லாமுகமது கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி செரினா (வயது 25) நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.

இவர்கள் கவுகாத்தி செல்வதற்காக காட்பாடி வழியாக செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து எஸ்-10 பெட்டியில் நேற்று புறப்பட்டு வந்தனர்.

இன்று காலை 7 மணிக்கு ரெயில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வந்தது.

அப்போது செரினாவுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. அவர் அலறினார். ரெயிலில் இருந்த பெண்கள் அவருக்கு உதவினர். ஆனால் பிரசவ வலி அதிகமானது.

அப்போது ரெயிலில் பயணம் செய்த திருநங்கைகள் 3 பேர் செரினாவை ரெயில் பெட்டியில் ஓரமாக படுக்கவைத்து பிரசவம் பார்த்தனர்.

சுகபிரசவம் ஆக வேண்டுமென பெண் பயணிகள் வேண்டிக் கொண்டனர். இக்கட்டான நிலையில் இருந்த செரினாவுக்கு திருநங்கைகள் லாவகமான பிரசவ வழி முறைகளை கையாண்டனர். காலை 2.40 மணிக்கு செரினாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து தாய் நலமாக இருப்பதை கண்ட பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பிரசவம் பார்த்த திருநங்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த பெட்டிகளில் இனிப்புகள் பரிமாறப்பட்டன. ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது போல காட்சியளித்தது. குழந்தை மற்றும் தாயை திருநங்கைகள் பாதுகாப்புடன் கவனித்தனர்.

அதற்குள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. இது பற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஆம்புலன்சு மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குழந்தைகள் நலவார்டில் அனுமதிக்கபட்டனர்.

ரெயிலில் பிரசவம் பார்த்த திருநங்கைகளுக்கு ரெயில்வே போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-