அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழை–எளிய மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்காக கல்விக்கடன் வழங்கும் முகாம் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்காக 30.7.16, 6.8.16 மற்றும் 20.08.16 ஆகிய தினங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 21 வங்கிகளை சேர்ந்த 68 வங்கிக்கிளைகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, வங்கியாளர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்விக்கடன் முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வங்கியாளர்கள் தனித்தனியே கவுன்ட்டர்கள் அமைப்பது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுழைவு வாயிலில் விவரங்கள் அளிப்பது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கலெக்டர் பேச்சு

அப்போது கலெக்டர் நந்தகுமார் பேசியதாவது:–

ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30.7.16 அன்று பெரம்பலூர், வேப்பூர் வட்டாரங்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளை சார்ந்த மாணவ–மாணவிகளும், 6.8.16 அன்று வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாரங்கள் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மாணவ– மாணவிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 20.8.16 அன்று நடைபெறும் கல்விக்கடன் முகாமின்போது மாவட்டம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் 30.7.2016, 6.8.2016 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கல்விக்கடன் முகாம்களில் கலந்துகொள்ள இயலாதவர்களும் இந்த முகாமின்போது கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கியாளர்கள் இந்த முகாமில் தவறாது கலந்துகொண்டு ஏழை, எளிய மாணவ–மாணவிகளின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு தகுதியுள்ள நபர்களுக்கு கல்விக்கடன் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சான்றிதழ்

கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், கல்லூரி மூலம் வழங்கப்பட்ட கட்டண விவரம், பெற்றோரின் ஊதிய சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவக்கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஷ்ஷ்ஷ்.ஜீமீக்ஷீணீனீதீணீறீuக்ஷீ.ஸீவீநீ.வீஸீ.என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த கல்விக்கடன் முகாமிற்காக விண்ணப்பங்களை முகாம் நடைபெறும் நாளன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் முகாம் குறித்த விபரங்களுக்கு 9445476298 மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 9442271994 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் குமரன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-