அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
V.களத்தூர். ஜுலை25.

வி.களத்தூரில் கடந்த 5-6 நாட்களாக நமது ஊர் கல்லாற்றில் கரூர் லதா சர்க்கஸ் நடைப்பெற்று வருகிறது. இதில் நமது ஊர் மக்கள் பலர் ரசித்து வருகின்றார்கள்.பலர் குடும்பத்துடன் ரசித்து வருகின்றார்கள். குழந்தைகள் மிகவும் விரும்பி பார்கின்றனார். நமது ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் நமது ஊரை சுற்றி உள்ள ஊர் மக்களும் ரசித்து வருகின்றார்கள்.தினசரி 2 காட்சிகள் நடைப்பெறுகின்றன. முதல் காட்சி மாலை 6:30 மணிக்கும், இரண்டாவது காட்சி இரவு 8:30 மணிக்கும் நடைப்பெறுகிறது. நேற்று நான் கூட சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன். முதல் 45 நிமிடம் ரிக்கா டான்ஸ்(சினிமா ஆடல் பாடல் ) நடைப்பெற்றது. அதில் முக்கியமாக ஒரு ரஜினி,விஜய், அஜித் பாடல் உண்டு. பிறகு அடுத்த 45 நிமிடம் சர்க்கஸ் நடைப்பெருகிறது. ஆடு,குதிரை,நாய்,குரங்கு போன்றவை உள்ளன.சர்க்கஸ் நிகழ்ச்சி என்றால் ஒரு கோமளி நம்மளை சிரிக்க வைப்பார்கள். இதுவும் உண்டு. டிக்கட் விலை 40 ரூபாய். ஆனால் சர்க்கஸ் கொஞ்சம் சுமார்தான். இருந்தாலும் நம்ம ஊரை நம்பி வந்து உள்ளனர். அதற்காக கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். முடிந்த அளவு மழை வரும் படி இருந்தால் சர்க்கஸ் நிகழ்சியை தவிர்க்கவும். ஏன் என்றால் நேற்று நான் சர்க்கஸ் பார்த்து கொண்டு இருக்கும்போது 7: 45 மணிக்கு மழை பெய்தது. சிலர் குடை கொண்டு வந்து இருந்தனர். இருப்பினும் மழை காரணமாக சர்க்கஸ் முடித்து விட்டார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-