அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வி.களத்தூர் சந்தை திடலில் 02.07.2016 மாலை 5.30 மணியளவில் சமூக நல்லிணக்க (இஃப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சி நகரத் தலைவர் நிஸார் அலி தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது இக்பால் கிராஅத் ஓதி துவங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் அனைவரையும் வரவேற்றார். ஜமாத் செயற்குழு உறுப்பினர் சர்புதீன், SDPI கட்சியின் மாவட்ட துணை தலைவர் ரபீக், SDTU மாவட்ட தலைவர் சித்திக் பாஷா, SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இரா. சுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர். இரா.சீனிவாசராவ், தலித் மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ப.சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி வி.களத்தூர் கிளை செயலாளர் பிச்சைபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் தலித்-இஸ்லாமியர்களின் ஒற்றுமை குறித்தும், வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வது குறித்தும் பேசினார்கள்.


இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினர் அஜாருதீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 200 க்குமேற்பட்டோர் கலந்து கொண்டோர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-