வி.களத்தூர் மற்றும் பெரம்பலூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு சார்பில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி, என மாவட்டந்தோறும் இயங்கி வருகிறது. இவை அனைத்தும் பெரும்பாலும் இருபாலர் பயிலும் பள்ளியாகவே உள்ளது. இதனால், பள்ளி செல்லும், மாணவிகள் சக மாணவர்களால் பல்வேறு தொந்தரவுகளை சந்திக்க நேடுகின்றனர்.
மேலும், தற்போது பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு என லப்பைக் குடிக்காடு, குன்னத்தில் மட்டுமே தனியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது.
இதே போன்று பெரம்பலூர் மற்றும் அரும்பாவூர், கைகளத்தூர், வி.களத்தூர், அம்மாபாளையம், பாடாலூர், செட்டிக்குளம், பகுதிகளில் மாணவிகளுக்கு என தனியாக பள்ளி துவக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.