அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... திருப்பூரில் இந்துத்துவ அமைப்புகள் தூண்டுதலின் பெயரில் பள்ளிவாசலை வெள்ளி கிழமை இழுத்து மூட வேண்டும் இல்லை என்றால் பூட்டுவோம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு போராட்டம் அறிவிப்பு !!
திருப்பூரில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பள்ளிவாசல்களை இந்துத்துவ அமைப்புகள் குறி வைத்து மூட வேண்டும் என்ற வேலையை செய்து வருகிறது இதற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார்கள் ஏற்கெனவே திருமுருகண் பூண்டி , குருவாயுரப்பன் நகர் , செஞ்சி தோட்டம் என தொடர்ந்து தற்போது 15 வேலம்பாளையம் பகுதியில் மகா லட்சுமி நகர் பள்ளிவாசல் கடந்த ஐந்து வருடங்களுகாக நடந்து வருகிறது எந்த இடைஞ்சல் இல்லாமல் இதை தொடர்ந்து அது முறையாக வக்பு செய்ய பட்டு உள்ளது இப்போது !!
இந்து முண்ணனி தூண்டதல் பெயரில் குடியுருப்போர் சங்கம் என்ற பெயரில் பள்ளி வாசல் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது இதன் தீர்ப்பு கடந்த மாதம் கொடுக்க பட்டது அதில் என்ன அனுமதி வாங்க பட்டதோ அதற்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது ஆனால் மாநாகராட்சி பல முறை பள்ளிவாசல் நிர்வாகிகள் அனுமதி கோரியும் வழங்க வில்லை இதை தொடர்ந்து கடந்த வாரம் ஆர் டி ஓ பள்ளியை மூட வேண்டும் என கூறி வந்ததை அடுத்து இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு பொது மக்கள் என கூடி பெரிய பதற்றத்தை தொடர்ந்து அதிகாரிகள் இஸ்லாமிய நிர்வாகிகளை அழைத்து நீங்கள் முறையாக நீதிமன்றம் மூலம் அணுகி ஒரு தீர்ப்பு பெறுங்கள் அது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என உறுதி அளித்தனர் !!
அதற்கு பின்னர் நீதிமன்றம் மாநகராட்சி என படி படியாக நடவடிக்கைகள் எல்லாம் பள்ளி நிர்வாகமும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் எடுத்து கொண்டு இருக்கும் போது திடீரென இரண்டு நாட்கள் முன் இந்து முண்ணணி அதிகமாக ஆட்களை திரட்டி கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பள்ளிவாசலை உடனடியாக மூட வேண்டும் என மனு அளித்து உள்ளனர் பின்னர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது வழக்கு போட்டுள்ளனர் இதை அடுத்து நேற்று இரவு மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாலுக்கு நோட்டிஸ் கொடுத்து உள்ளனர் அதில் வெள்ளி கிழமைக்குள் பள்ளிவாசலை மூட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி மூடும் என்று கூற பட்டுள்ளது இதனை தொடர்ந்து !!
அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் மஜித் தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்திய தவ்ஹித் ஜமாஅத் தமுமுக எஸ் டி பி ஐ ஜமாத்தே இஸ்லாமி ஜமாஅத்துல் உலமா என அனைத்து இஸ்லாமிய அமைப்பு கட்சிகளின் நிர்வாகிகள் கூடி தொடர்ந்து திருப்பூரில் பள்ளிவாசல்கள் மீது அவதூறு கூறி முடக்க நினைக்கும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து வெள்ளி கிழமை மாலை இன்சா அல்லாஹ் 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்ளது !!
நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை ஆணை வாங்குவது தொடர்பாக இன்று அல்லது நாளை தடை ஆணை பெறும் பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது !!
அல்லாஹ்வின் பள்ளியை காக்க இன்னொரு பாபர் மசுதியை இழக்காமல் இருக்கு நம் உரிமையை பெற ஒன்று கூடுவோம் திருப்பூரில் இன்சா அல்லாஹ் !!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-