அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




பெரம்பலூரில் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வீட்டு வசதி திட்டம்

நகர்ப்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தினர் அனைவருக்கும் வீடு வழங்கும் பொருட்டு, பெரம்பலூர் நகராட்சியில் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் அடிப்படையில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள பிரிவினருக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையினர் என்ற அடிப்படையில் ரூபாய் 6½ லட்சம் £ன வட்டியுடன் கூடிய மானியத்துடன் வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற அதிகப்படியாக 30 சதுர மீட்டர் வீட்டுமனை சொந்தமாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இதேபோல ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள நபர்களுக்கு குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் என்ற அடிப்படையில் ரூ.6½ லட்சம் வட்டியுடன் கூடிய மானியத்துடன் வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 60 சதுர மீட்டர் வீட்டுமனை சொந்தமாக இருக்க வேண்டும்.

எனவே பெரம்பலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட தகுதி உள்ளவர்கள் பெரம்பலூர் நகராட்சி ஆணையரை நேரில் தொடர்புகொண்டு, உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-