அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் நாட்டில் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் கோடை மாதங்கள் தான் என்றாலும் இந்த முறை வெப்பம் அதிகரித்துள்ளது, துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலையானது 50 செல்சியஸ்ஆக உள்ளது,

அபுதாபியில் 48 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் தாக்கம் உள்ளது. இந்த வெப்பநிலையின் தாக்கம் வருகிறது சனிக்கிழமை வரை நீடிக்கும் என்றும் அதிகபட்சமாக இன்னும் 2 நாட்களுக்கு பிறகு தூசிகளுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானியல் ஆராய்ச்சி தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தூசி மேகங்கள் 3,000 மீட்டர் தூரம் வரை செல்வதால் மத்திய பகுதிகளில் உள்ள இடங்களில், பார்க்கக்கூடிய தன்மை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் வெயில் நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது இந்த வெப்பம் மிகுதியின் தாக்கத்தால், ஓமன் கடலினை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர், இன்னும் 2 நாட்களுக்கு இந்த கடலில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-