இஸ்லாமிய முறைப்படி தலையை மறைத்து ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பிரான்ஸ் தனியார் நிறுவனம் மீது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆயிஸா என்ற பெண் அந்த நாட்டில் உள்ள தனியார் கம்பனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர் ஹிஜாப் அணிந்து ( முகத்தை மறைக்காமல் ) பணிக்கு சென்றுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு நிறுவன நிர்வாகம் ஹிஜாப் அணியாமல் பணிக்கு வரும்படி கோரியுள்ளது.
இந்த நிலையில் இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் நிறுவன நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஆயிஷா மார்க்கத்துக்கு முரணான விடயத்தை தான் ஒருபோது செய்யவிரும்பவில்லை எனவும் பிரான்ஸ் நாட்டில் ஹிஜாப் அணிய தடையில்லாத போது இது ஒரு இனவாத செயற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்..
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.