அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




2016-ம் ஆண்டிற்கான உயர்கல்வி உதவி தொகை திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் அறிவித்துள்ளது. இவ்வுதவி தொகை 12ம் வகுப்பிற்கு மேல் உயர்கல்வி தொடர விரும்பும் ஏழை மற்றும் நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கானது. இவ்வருட கல்வி ஆண்டில் 2016 - 2017 தங்களது படிப்பை தொடங்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த ஆறு வருடங்களாக உயர்கல்விக்கான உதவிதொகையை வழங்கி வருகின்றது.




முதுநிலை பட்ட படிப்பு, டிப்ளமோ அல்லது வேறு ஏதேனும் உயர்கல்வி குறைந்த பட்சம் ஒரு வருட கால அளவு படிப்பை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதழியல், சட்டம் மற்றும் சமூக பணி சார்ந்த படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை 


> என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பலாம். அல்லது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தியாக்கி பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். மேலும் விண்ணப்பங்கள் இ-மெயில் மூலமும் பெறப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை popularfrontscholarship@gmail.com  

<mailto:popularfrontscholarship@gmail.com>   
என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 31 ஆகஸ்ட் 2016.




பாப்புலர் ஃப்ரண்டின் உயர்கல்விக்கான உதவித்தொகை கடந்த 2011-2012க்கான கல்வியாண்டு முதல் தேசிய அளவில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை 12 மாநிலங்களை சேர்ந்த 4658 மாணவர்களுக்கு (3053 மாணவர் மற்றும் 1605 மாணவியர்) 4 கோடி ரூபாயை உதவிதொகையாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 202 மாணவர்களுக்கு 17 இலட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளோம். தமிழகத்தில் இக்கல்வி ஆண்டும் உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




இம்மாணவர்கள் பணியில் சேர்ந்த பின் கல்விக்காக பொருளாதார ரீதியாக சமூகத்திற்கு பங்களிப்பவர்களாகவும், சிறந்த குடிமகனாக சமூக சேவையில் ஈடுபடவும் கற்று கொடுக்கின்றோம்.




இப்படிக்கு




M. முஹம்மது சேக் அன்சாரி,

மாநில பொதுச்செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,

தமிழ்நாடு.




http://popularfronttn.org/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-