அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலகளாவிய அளவில் ஆண்டு தோறும் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா நோய்களால் பாதிக்கப்பட்டு சுமார் பத்து லட்சம் பேர் உயிரிழந்து வரும் நிலையில் கொசுக்களை மனித குலத்துக்கு ஆபத்தான உயிரினமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொசுக்களினால் பரவும் மலேரியா நோய்க்கு மட்டும் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் ஐந்து வயதுக்குட்ட 6 லட்சம் குழந்தைகள் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் கொசுக்களினால் பரவும் நோய்கள் 30 மடங்கு அதிகரித்து விட்டதாக இந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 250 கோடி மக்கள் டெங்கு காய்ச்சல் அபாயத்துக்கிடையே வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் உயிரினமான கொசுக்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றது.

மலேரியாவை தவிர டெங்கு, சிக்கன் குனியா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் பத்து லட்சம் பேர் உயிரிழந்துவரும் நிலையில் கொசுக்களை மனித குலத்துக்கு ஆபத்தான உயிரினமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-