அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி அரேபியாவில் வேலை இழந்து தவிக்கும் 10 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு தாயகம் கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சவூதியில் பல்வேறு தொழிற்சாலைகள் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய அமைப்புகள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

குவைத்திலும் இந்தியர்கள் பலர் வேலை இழந்து தவிப்பதால் இரு நாடுகளுக்கும் சிறப்பு விமானங்களை அனுப்பி வேலை இழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்டு தாயகம் அழைத்துவர வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-