அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 கோப்புபடம்.

மும்பை,


விவாகரத்தான துபாய் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ரூ.80 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மும்பை வாலிபர் கைது செய்யப்பட்டார்.துபாய் பெண்

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சமீர்(வயது35). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் வாயிலாக துபாயில் வசித்து வரும் விவாகரத்தான பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சமீர் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதை நம்பிய அந்த பெண், சமீரை சந்திக்க 2 முறை மும்பை வந்தார். அப்போது சமீர் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.

பின்னர் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், உடல்நிலை சரியில்லை என பல்வேறு காரணங்களை கூறி ரூ.80 லட்சத்தை கறந்து உள்ளார்.வாலிபர் கைது

இந்தநிலையில் சமீர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த துபாய் பெண், கடந்த மார்ச் மாதம் சமீர் மீது எம்.ஐ.டி.சி. போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு மற்றும் மோசடி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சமீர் சம்பவத்தன்று மலாடு பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சமீரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-