அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்: தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற 8,000 தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர்ந்து 11வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றினர். குவைத்தில் உள்ள கராஃபி நேஷனல் என்ற எரிவாயு நிறுவனத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் கேட்டு இவர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் 11வது நாளாக நீடிக்கிறது.

கேரள மாநில எம்.பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை போல தமிழக அரசும் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என ஊழியர்கள் கோரியுள்ளனர். கராஃபி நேஷனல் என்பது குவைத் நாட்டில் பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் மிகப் பொயி குழுமம் ஆகும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சர்வதேச சந்தைளில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து விட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலையே ஊதியம் வழங்கப்படாததற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. -  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-