அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம்,
கண்டியூர் கிராமத்தில் சற்று முன் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 80 வீடுகள் தீக்கிரையாகின,
15 சிலிண்டர்களுக்கு மேல் வெடித்துள்ளன,


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 80 வீடுகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள தர்கா தோப்பில் 80-க்கும் அதிகமான கூரை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வசித்து வரும் சம்சுதீன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். இவரது வீட்டுக் கூரையில் புதன்கிழமை மாலை தீ பற்றி எரிந்தது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் அடுத்தடுத்து உள்ள வீடுகளிலும் தீ பரவியது. பல்வேறு வீடுகளில் இருந்த கிட்டத்தட்ட 10 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதன் காரணமாகவும், காற்றின் வேகத்தாலும் அப்பகுதியில் உள்ள ஏறத்தாழ 80 கூரை வீடுகளில் தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த எஸ். ஷேக் அலாவுதீன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாற்றுத் திறனாளியான இவர் தப்பியோட முடியாமல் தீயில் கருகி இறந்துள்ளார்.
மேலும், பலத்தக் காயமடைந்த இருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வீடுகளைச் சுற்றியுள்ள தென்னை மரங்களிலும் தீ பற்றியதால் ஒவ்வொன்றாக எரிந்து சாய்ந்து விழுந்தன. மேலும் 25-க்கும் அதிகமான மரங்கள் கருகிவிட்டன.
தகவலறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், விமானப் படை நிலையம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 8 தீணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. என்றாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அணைப்பதில் சிரமம் நிலவியது. எனவே, இரவிலும் தீயணைக்கும் பணி தொடர்ந்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தினர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-