அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஜூன் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் ஏர் இந்தியா விமானங்கள் 16 ஆயிரம் முறை தாமதம் ஆனதாகவும், 11 ஆயிரம் முறை விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டத்தாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புதுடெல்லி:

சமீபத்தில் பாலிவுட் நச்சத்திரம் ராகுல் போஸ் அரசு விமான போகுவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் தான் அமர்ந்திருந்த இறுக்கை, கை பிடி, ஹெட் போன் ஆகியவை உடைந்திருந்ததாக டுவிட்டர் மூலம் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா" தவிர்க்க முடியாத சூழ்நிலை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 16,848 ஏர் இந்தியா விமானங்கள் 15 நிமி்டங்களுக்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.

மேலும் 11,267 ஏர் இந்தியா விமானங்கள் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன. விமானங்களை நேரந்தவறாமல் இயக்க பணியாளர்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமதங்களை தவிர்க்க அவ்வப்போது விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் தரைதளத்தை கையாளுபவர்களிடம் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-க்கு ஏற்பட்ட நிலை, ஏர் இந்தியாவிற்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கையில் தான் உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-