அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள்.

அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்தி புகைப்படம் எடுத்து சோஷியல மீடியாக்களில் வெளியிட, அவர் எதிர்பார்த்த லைக்குகளும் ஷேர்களுமாக அந்தப்படம் பகிரப்பட்டு வருகிறது.

நீங்களும் இந்த படத்தை பார்த்து உங்களின் குதிகால்கள் ஜில்லிட்டால்... என் இனமய்யா நீ.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

 அதிரை நியூஸ் 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-