அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


   தொடர்ந்து 3 வருடமாக துபாயில் கட்டணம் பெறாமல் இப்தார் உணவு வழங்கும் உணவக உரிமையாளர்
துபாயில் அல் அமீன் உணவகம் நடத்தி வரும் கீழக்கரையை சேர்ந்த ஆசாத் மூன்று வருடமாக கடைக்கு வரும் அனைவவருக்கும் கட்டணமில்லாமல் ரமலான் முழுவது இப்தார் உணவு ஏற்பாடு செய்து வருகிறார்.
3 மெஜைகள் மட்டுமே உள்ள இந்த சிறிய உணவத்தில் இப்தாருக்கு வருபவர்களுக்கு உணவு தருவதோடும் கடைக்குள் உள்ள அறையிலும் மீதமுள்ளவர்களுக்கு உணவருந்த ஏற்பாடு செய்கிறார். கடை சிறிதாக இருந்தாலும் பிறர்க்கு உதவ வேண்டும் என்ற மனமே பெரிது என்பதை நிருபிக்கிறார். நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்டோர் இதில் பயன் பெறுகின்றனர்.
இவர் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவராக பல்வேறு சமூக பணிகளை ஆற்றியுள்ளார்.தற்போது பசுமை கீழக்கரை திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியாதவாது,
இது எனக்கு இறைவன் அளித்த வாய்ப்பு இங்கு வந்து இப்தார் உணவருந்துபவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் அவர்களின் மன நிறைவு ஒன்றே போதும் . பணம் சம்பாதிப்பதை காட்டிலும் உயர்வு மனஙகளை மகிழ்ச்சியடைய செய்வதே என்றார்.
இவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல மொபைல் எண்.0097155 2682788

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-