அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூரில் பாலக்கரை– துறைமங்கலம் மூன்று ரோடு இடையே ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

புதிய பாலம்

பெரம்பலூர் நகருக்குள் ஆத்தூர் சாலை, துறையூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் சில மாதங்களுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் விளாமுத்தூர் பிரிவு சாலை அருகே பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி 2–வது கட்டமாக நடந்து வருகிறது.

பாலக்கரையில் உள்ள பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் அதனை கவனத்தில் கொண்டு பாலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாலக்கரை அருகே இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.

சாலை அகலப்படுத்தும் பணி

இந்த நிலையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து துறைமங்கலம் மூன்று ரோடு வரை எங்கெங்கு சாலையை அகலப்படுத்தப்படுத்தினால் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்று நெடுஞ்சாலைத்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல சாலை விரிவாக்கம் பணிக்கு அனுமதி பெறப்பட்டு ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி கோட்ட பொறியாளர் ஜெயச்சந்திர சூரியநாராயணன், உதவி பொறியாளர் கலைராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

துறைமங்கலத்தில் சுமார் 1.4 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலையை 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் பிரதான சாலையில் இருந்து தெருக்களுக்கு பிரிந்து செல்லும் இணைப்பு சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்க பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-