அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 29 ஆம் தேதி முதல் இலவச ஆரி தையல் வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் மைய இயக்குநர் (பொ) பா. அருள்தாசன்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜுலை 29 முதல் ஆரி வேலைப்பாடு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வயது வரம்பு: 18 முதல் 35.கல்வித்தகுதி: குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தொடர்ந்து 21 நாள்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசம். பயிற்சி முடித்ததும் சான்றிதழ் அளிக்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரைத் தொடர்பு கொள்ளவும். ஜுலை 28-ல் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04328 277896.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-